நாட்காட்டி

நாட்காட்டியைக் கண்டதும்
கரைந்து சென்ற
காலத்தின் நினைவுகள்
கடந்துவந்த நிகழ்வுகள்
அலைமோதும் நெஞ்சில்
அணிவகுக்கும்
விழிகளின் விளிம்பில் !

நம் வயது
நமக்கு தெரியவரும்
பயன் தந்த நாட்களும்
வீணான பொழுதுகளும்
மூளைச் சுவர்களில்
முட்டி மோதிடும் !

வாழ்ந்த வசந்தகாலம்
மறந்து விடும்
வாழப் போகும்
நாட்களை நினைத்து
வாடிப் போகும் !

பிறந்த நாளை
அறிந்த நாம்
இறக்கும் நாளை
அறியோம் எவரும் !

நாளும் காண்கின்ற
நாட்காட்டி கூறிடுமா
அதையும்... !
நாளும் நமதல்ல
நாளையும் நமதல்ல
புரிந்து கொண்டோர்
புன்னகை பூத்திடுவர்
குழம்பி நிற்போர்
கலக்கத்தில் இருப்பர் !

பழனி குமார்
06.06.2019

எழுதியவர் : பழனி குமார் (6-Jun-19, 8:46 am)
Tanglish : naatkaatti
பார்வை : 424

மேலே