நிலவும் அவளும்

நீலவான திரையரங்கு அதில்
வெண்முகில்தான் மூடிய திரையாம்
திரைவிலக்கி காட்டியது தன்
அழகு முகத்தை தன்னொளி வீசி பால்நிலா
அவள் வருகைக்கு காத்திருந்த என்னுளத்தில்
நிலவின் எழில் முகம் இன்பம் பொங்கிட செய்திட
மனதில் அவள் முகம் நிலவாய்த்தெரிந்தது
காதல் கனவாய் …… அவளும் வந்தாள் அவ்வளவில்
அந்த நிலவோ மண்ணில் இறங்கியது என்றெண்ணி
அந்த நிலவை பிடித்தேன் அணைத்தேன் முத்தமிட்டேன்
வான் நிலவே இவள் என்றெண்ணி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (6-Jun-19, 10:31 am)
Tanglish : nilavum avalum
பார்வை : 395

மேலே