காதல் மனைவியே

காதல் மனைவியே

மனைவியே மாணிக்கமே
கோபமா
பேசமாட்டாயா
என்ன இன்று நீ
மெளன விரதமோ
ஒரு காபி கிடைக்குமா

காபியை கையில் கொடுத்தால் என்ன
குறைந்தா போயிவிடும்
பாவம் மேஜை
நிச்சயம் அதற்கு வலித்திருக்கும்.

ஆஹா! அற்புதமான காபி
உன்னை மாதரியே சுவையாக உள்ளது.
என் காதல் மனைவியே
என் கண்மனியே
எப்படி நீ அப்படியே அழகாய் உள்ளாய்
அதிசயம் ஆனால் உண்மை
நான்கு பத்தை தொடப்போகும் நீ
பதினெட்டு பருவ மங்கை என காட்சி
அளிக்கிறாய்
அழகே உன்னை ஆராதனை செய்யவா
அல்லது அடுத்து நீ துவங்கும் வேலைக்கு உதவி செய்யவா
இன்னும் என்ன கோபம்
என் சின்ன இடையாளே
அப்படி உன் கண்களால்
பார்க்காதே
கள்ளியே அந்த பார்வையில் காதல் மிகுந்து வழிகிறது
என்னை உன்னிடம் இழுக்கிறது
என்னுள் காமம் விழிக்கிறது
அடுபங்கறையை அந்தபுரமாக மாற்றிவிடாதே.

சிரித்துவிட்டாய்
சிறப்பு மிக சிறப்பு
காதல் மனைவியே
அழகு பெட்டகமே
இன்ப சுரங்கமே
இனிய சங்கீதமே
என் நிரந்திர பொக்கிஷமே

உன் முன்னழகு மாண்புமிகு
உன் பின்னழகு மேதகு
உயர் திரு அழைக்கிறேன்
திருமதி வரவேண்டும்
என் கரம் பற்ற வேண்டும்
காதலின் உச்சத்தை நாம் அடைய வேண்டும்.
- பாலு.

எழுதியவர் : பாலு (7-Jun-19, 4:25 am)
சேர்த்தது : balu
Tanglish : kaadhal manaiviye
பார்வை : 341

மேலே