தேநீர் கோப்பை நீரால் நிறைந்தது

புல்வெளியில் காலை நேர தேநீரை
அருந்தியவாறே டீப்பாயின் மேல்
மூடிக் கிடந்த அன்றைய தினசரியைப் பார்த்தேன்
நான் புரட்டவில்லை...... அன்றாட அரசியல் அவலங்களை
தாங்கி வந்திருக்கும் !
மெல்லிய குளிர் காற்று வீசியது
காற்றில் தினசரியின் ஓரம் தானே திறந்தது
அரைகுறை ஆடையில் அழகி விளம்பரத்திற்கு சிரித்தாள்
வெட்கத்தில் காற்று நகர தினசரி தானே மூடிக் கொண்டது !
வானத்தை நிமிர்ந்து பார்த்தேன்
முகில் சூழ்ந்து வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது
மெல்லிய குளிர்காற்று என்ன இனிய சூழல் !
வான மகள் பருவமடைந்தது விட்டாள் !
பாவாடை தாவணியில் மெல்ல நடந்து கொண்டிருந்தாள் !
பொழிவாய் பருவ மகளே பொழிவாய்
நீரின்றி அமையாது இவ்வுலகம் நீ அறிவாய்
ஆதலினால் பொழிவாய் பொழிவாய்
அவள் கல கலவென சிரித்தாள் பொழிந்தாள் !
படிக்காத தினசரி முழுதும் நனைந்து புல்வெளி வதியில் விழுந்தது !
பழைய பேப்பர்காரன் எடைக்கு ஒன்று குறையும் !
காலி தேநீர்க்கோப்பை நீரால் நிறைந்தது நெஞ்சும் நிறைந்தது !
மழையில் மகிழ்ச்சியில் சற்று நனைந்தவாறே
வான மகளுக்கு நன்றி சொல்லி அறையில் நுழைந்தேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jun-19, 10:07 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 149

மேலே