வாழ்க்கை ஒரு அழகான பயணம்

வாழ்க்கை ஒரு அழகான பயணம்...;

ஒவ்வொரு புதிய கணமும் புத்துணர்வோடு மலர
சந்திக்கின்றோம் புத்தம் புது அனுபவங்களை
சம்பாதிக்கின்றோம் புதிய சொந்தங்களை;

பல நேரங்களில் சில மனிதர்கள்
தாங்கள் "தோழமையான சொந்தங்கள் " அல்ல
"சக மனிதரே" என்று கூறாமல் உணர்த்தி
மனதை ரணமாக்கி இதுவும் கடந்து போகும்
என்று சொல்லிச் செல்ல;

சில நேரங்களில் "சக மனிதர்கள் "
தாங்கள் " புரிந்துணர்வுள்ள மாமனிதர்கள் "
என்று இன்ப அதிர்ச்சி தந்து மனித நேயத்தை உணர்த்த ;
கடந்து போகும் நிமிடங்கள் வாழ்க்கைப்
பாடங்களை இனிதே விளக்க;

இன்பத்தையும் துன்பத்தையும் சமப்படுத்தி
இவையகத்தில் சுவர்க்கம் காணவிரும்பும்
"சக மனிதரை" புரிந்துகொண்ட நீ ,
உன் "தோழமையான சொந்தங்களை"
அவர்தம் கல்நெஞ்சுடன் இருக்க
பரிவுடன் நீ ஏற்க தவிறிவிட்டாயென்று ஒரு அசரீரி கேட்க;

பிழைத்துக்கொண்ட குற்றவாளி கண்களில் நன்றியுடன்
சந்திக்கும் ஒவ்வொரு மனிதனையும்
தூய உயிராக வாழ்வின் வழிகாட்டியாகயேற்று
வாழ்க்கைப் புத்தகத்தை ரசித்து எழுதுகின்றான்!

~ நியதி ~

எழுதியவர் : நியதி (8-Jun-19, 2:08 am)
பார்வை : 646

மேலே