இதுதான் இன்றும் என்றும்

​மயானத்தின் அமைதி
மரணத்திற்குப் பின்னர்
நிலவிடும் மனிதனின் நிலை ...

இறுதிவரை வருபவர்கள்
இறுதி யாத்திரையின்
ஒரு பகுதியே உறுதியாய் ...

நிலையற்ற உயிருக்கு
நிரந்திரமிலா வாழ்வில்
நித்தம் ஒரு போராட்டம் ...

உயிரற்ற கூடான பின்னர்
அழைத்த பெயரும் மறைந்து
உச்சரிப்பது உடல் என்றுதான் ...

தீ மூட்டிய சிதையை
திரும்பிப் பார்க்கவும்
ஒரு இதயம் இருக்காது ...

எரியும் உடலை
ஏறெடுத்து நோக்க
எவரும் விரும்பிடார் ...

வாழ்ந்தர்வரின் நிலையும்
வாழ்க்கையின் நியதியும்
இதுதான் இன்றும் என்றும் !

அறிந்துக் கொள்
புரிந்து வாழ் !பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (8-Jun-19, 7:36 am)
பார்வை : 746

மேலே