பிய்யாவா

பிய்யாவா?
@@@@@@@
பிறந்த என் பேத்திக்கு
என்னடா பேரென்று
என் பேரனைக் கேட்டேன்.
@@@@@
பெயரைக் கேட்க என்ன உள்ளது பாட்டி?
வழக்கமாய்ப் பிள்ளைகளுக்கு
தமிழர்கள் தமிழ்ப் பெயர்களைச் சூட்டும் பண்பாடு இல்லையே!
என் பெண் குழந்தைக்கு இந்திப்
பெயரைச் சூட்டுவதே ஏற்புடைய செயலாகும்.
@@@@@
என்ன பெயர் என்பதைச் சொல்லடா பேரா.
@@@@
'பியா' (Piya) என்பதே என் அருமைச் செல்வியின் பெயராகும்.
@@@@
'பிய்யவா'? ச்சீசீ...என்னடா பேரு இது
அசிங்கமான பெயராய்த் தெரிகிறதே?
@@@@@
'பிய்யா' இல்லை பாட்டி.
'பியா' என்பதே சரியான உச்சரிப்பு.
@@@@@@@
'பிய்யா'வுக்கு என்னடா பொருள்?
@@@@@
'பியா' என்ற பெயருக்கு 'மரம்' என்பதே பொருள்.
@@@@@
பெற்ற பிள்ளைக்கு 'மரம்' என்று பெயர் வைப்பதா?
@@@@@
'பிய்யா' என்ற பெயரைக் காதில் கேட்டால்
ஊர் மக்களே அப்பெயரைக் கேட்டுச் சிரிப்பார்களே!
@@@@@
எத்தனையோ என்னென்னவோ இந்திப் பெயர்களைச் சூட்டிப்
பெருமிதம் கொள்ளும் தமிழர்களே அதிகம்.
அர்த்தம் தெரியாத இந்திப் பெயர்களைச் சூட்டுவோர் பலர் இருக்க
பொருள் தெரிந்த இந்திப் பெயரை
என் அருமைக் குழந்தைக்குச் சூட்டியதில் பிழையொன்றும் இல்லையே!
@@@@
போடா போடா போக்கத்தவனே,
தமிழ்ப் பெயரைப் பிள்ளைகளுக்குச் சூட்டாத தமிழரெல்லாம் தமிழரே
இல்லை என்பது என் சொந்தக் கருத்து.
@@@@@
ஊரோடு ஒத்துப்போய் பெற்ற பிள்ளைக்கு இந்திப் பெயர் சூட்டுவதே தற்காலத் தமிழரின் தலைசிறந்த பண்பாடு பாட்டி

எழுதியவர் : மலர் (9-Jun-19, 8:12 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 25

மேலே