கூர்மை படுத்தும்

நண்பர்கள் இருவர்
நடை பயணம் போகையில,
புகையிலைச் செடியை
நுகர்ந்து பார்த்த கழுதை ஒன்று
முகத்தைத் திருப்பிக் கொண்டு
நின்றதைக் கண்ட
நண்பன் சொன்னான்
“ புகையிலை கழுதைக்குக் கூட
பிடிக்கவில்லையே!”

அடுத்த நண்பன்
அவனது புகையிலை பழக்கத்தை
கிண்டல் செய்வதாகக் கருதி
சிரித்துக்கொண்டே சொன்னான்
“ கழுதைகள் புகையிலையை
எப்போதும் விரும்பாது”
அர்த்தத்தை உணர்ந்த நண்பர்கள்
இருவரும் அகமகிழ்ந்தனர்
அறிவாற்றலை
அறிவுதான் கூர்மை படுத்தும்

எழுதியவர் : (9-Jun-19, 8:46 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : koormai paduthum
பார்வை : 97

மேலே