வெல்க தமிழ்

"வெல்க தமிழ்...!"

ஈழத்து எழுச்சிப் பாடல்களை மனதில் வாங்கி இதயம் கனக்க;
உணவு மறுத்து எனக்குள் போராட்டம் செய்யும் நான்
ஆறிய தேநீருடன் ; ஆழ்ந்த சிந்தனையில்...!
கனத்த இதயத்தில் திடீர் மகிழ்ச்சி
அதிகமாக ரசிக்கும் இசையால் கிடைத்த மலர்ச்சி;
மனம் பஞ்சாகின்றது இசை மழையில்
முகில்களுடன் மிதப்பதாக கற்பனை ஒரு நொடியில்;
ரணங்கள் காலத்தால் ஆறும் என்று மனதில் ஒரு ஆறுதல்
குறைகள் மறந்து பாலங்களை அமைப்பது அவசியம் என்று ஒரு மாறுதல்;
பலவீனங்களை வென்று வாழ முயற்சிக்க வேண்டும் என்ற ஞானோதயம்
தோன்றட்டும் என்றும் மனவானில் சூரியோதயம்;
தமிழ் பண்பாடு மரபணுக்களில் வாழும் இறுதி மூச்சுவரை;
மன்னிப்புகளும் புரிந்துணர்வும் தமிழனை மனிதனாக்க
வெல்லும் தமிழ் ....!
இளையராஜாவின் "தென்றல் வந்து தீண்டும்...." எனும்
பாடல் மீண்டும் மீண்டும் தேனாய் காதில் இனிக்க
பசியுடன் நான் சமையல் அறை நோக்கி.....!

~ நியதி ~

எழுதியவர் : நியதி (9-Jun-19, 11:03 am)
பார்வை : 2068

மேலே