முதுமொழிக் காஞ்சி 80

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
சார்பி லோருக்(கு) உறுகொலை யெளிது. 10

- எளிய பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், நல்ல நண்பர்களைச் சாராதோர்க்குப் பொருந்திய கொலைத்தொழில் செய்தல் எளிது.

'சால்பில்லோருக்கு உறுகொலை யெளிது' என்று பாடங் கொண்டு

'நல்ல குலத்தைச் சாராத குணம் இல்லாதார்க்கு மிகவும் உயிர்க்கொலை எளிது' என்றுரைக்கின்றது ஒருபிரதி.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்,
இனந்தூய்மை தூவா வரும். 455 சிற்றினஞ் சேராமை

ஆதலால், நற்சார்பு இல்லார் கொலை முதலிய தீச்செயல்களை எளிதிற் செய்வர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jun-19, 3:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 78

சிறந்த கட்டுரைகள்

மேலே