இயற்கை-மனிதனின் அத்துமீறல்கள்
நகரங்களின் எல்லைகள் நீண்டிடவேண்டும்
நகரங்களை சார்ந்த கிராமங்களின் வயல் வெளிகள்
காணாமல் போகின்றன, காணாமல் போகின்றன , விவசாய நன்னிலங்களும்,
நாளைய சமுதாயத்தின் உணவு பற்றிய சிந்தனை
சிறிதேனும் இல்லாததுபோல் …..
வளரும் போக்குவரத்தை சமாளிக்க நெடுஞ்சாலைகள்
சீரமைப்பு விரைவு பணிகள் …….
காணாமல் போகின்றன
மன்னர்கள் வழிகாட்டி வளர்த்த நிழல் தரும் மரங்கள்
அழிக்கப்படும் காடுகள் துள்ளடைக்கப்படும்
ஏரிகள், குட்டைக் குளங்கள் …………
ரயில் வழி மார்க்கம் விஸ்தரிப்பு ……
காடுகள் அழிப்பு பாவம் காணாமல் போகும்
ஊமை காட்டு மிருகங்கள்…..
கடல் மட்டத்திற்குமேல் மலைகளில் அமைந்த வனப்புமிகு
கோடைவாச சிறுநகரங்கள்…...சுற்றுலா பெருக்க
கட்டிடங்கள் பல அமைந்திட ……
காடுகள் அழிப்பு காட்டு மிருகங்களுடன்
இப்படி மனித செய்யும் இந்த விபரீத
இயற்கை மீறல்கள் விளைவு ,,, அனல் கக்கும்
கோடை கத்திரியையும் தாண்டி சுட்டெரிக்கும்
வெய்யல் நூற்றாண்டு கண்டிரா வகையில்
காடெல்லாம் அழிய மழைதரும் மேகங்கள்
இல்லாமல்போக பருவ மழை வாராது verum
புயல் மட்டும் வீசிவிட்டு போகிறது…
மழைவேண்டி மக்கள் …..வேண்டாதபோது
மழையும் கொட்ட, மழை நீரைக் காக்க முடியாது
வீணாய்ப்போகிறது கடலில் கலந்து போகும்போது
வெள்ளம் அழிவு தந்து.
ஓடும் நதி நீரில் பெருகிவரும் தொழிற்சாலைகள்
ரசாயனம் கலப்பு …. தெள்ளிய நதி நீர்
கருநீலமாய் மாறி அந்நீரைக் குடிக்கும் மக்கள்
சொல்லொணா நோய்கள் படுத்தும் துயரில் ….
இப்படியே எழுத எழுத நீளும் மனிதனின்
இயற்கையோடு நடத்தும் அராஜகம் அத்துமீறல்
நாளை இயற்கை இவனை அளித்திவிடும் என்று
அறியாதவனா இவன்….!!!! இறுமாப்பு
அறிந்த சிலராவது விழித்துக்கொண்டு
வீட்டிற்கு ஒரு maram /செடி வளர்ப்போம்
அழிந்த காட்டை சிறிதாவது மீட்போம்
நாளை உலகின் நலம் காக்க