நம் வாழ்க்கை

பிறப்பிலும் வளர்ப்பிலும் தனிமையின் மடியில் தவழ்ந்து கரைசேர யாரும் கை கொடுத்ததில்லை..! தந்தையின் பரிவும் தொடுவானம்.. தாய்மையின் கணங்கள் எனக்காய் உழைப்பதிலே கரைய.., அன்பை உணராமலே துளிர்த்தது இத்தளிர்..!
பள்ளிப் பருவம்.. உன்னை காதலிக்கிறேன் என்றவனிடம் பல மாத மௌனத்திற்கு பிறகு.., அவன் வலிக்காக ஏதும் புரியாமல் சம்மதித்த கணங்களில்..,
எனக்குத் தெரிந்த காதல் எல்லாம் நினைவுகள் மட்டுமே... அவனோடு பேசாத நாட்களுக்கும்.., பார்க்காத நாட்களும் மௌனமாய் நான்கு வருடம் நகர.., முதல்முறை என்னுள் அன்பை இனம் கண்டவன்... எனக்கு சகோதரன் என்ற பெயரில் என் அனைத்து உறவாக தோன்றியவன்...
தந்தைக்கு இணையான அவன் பாசத்தில் ஏங்கி நின்றேன்...
எல்லையற்ற அவன் அன்பில் என் ஒட்டுமொத்த உறவும் அவனிடத்தில்... சகோதரி என்றவனிடம் சில சஞ்சலங்கள்... யாரிடமும் எடுக்காத புகைப்படங்கள் அவனுடன் மட்டும் ஏன் என்றவர்களின் வார்த்தைகள் என் மனதிலும் விதைக்கப்பட..,
என் வாழ்க்கையில் எல்லாமாய் நீ வேண்டும் என கேட்க துணிவின்றி நினைவுகளோடு பயணிக்க எண்ணிய கணங்களில்.. என் ஒற்றைப் பார்வை சந்தேகத்தில்.., அதை நீ கேட்க.., என்னென்று கூறுவதென்றறியாது ., சில மௌனபோராட்டத்திற்கு பின் உதிர்த்த என் வார்த்தைகளில், இருவரும் மீண்டும் மௌனங்களில் கரைய.., பிறர் வார்த்தைகள் என்னென்று வருமோ என்ற எண்ணங்களுடனும் அன்றாட உரையாடலுடனும் நாட்கள் நகர..,
அனைவரும் அறிகின்ற நிலையில்.., உன்னை கேவலமாய் தூற்றுகையில் என் பிழைகள் கேள்விக்குறியாய் நிற்க... உடைந்து போனதடா என் உள்ளக் கண்ணாடி.. என் சுயநலம் உன்னை மெழுகாய் உருக்கிடுமோ என்ற குற்ற உணர்ச்சியில் நான்...!
உன்னோடான பந்தம் இந்த ஜென்மம் முழுதும் வாழும்.. உன் நினவில் என்றாலும் சரி..! என்னவன் என்ற எண்ணங்களுடன் உன்னவளாய் வாழ்ந்து விடுகிறேன்..., என் இறுதி மூச்சு வரை... உன் யதார்த்த முகத்தைப் பார்க்கையில் கரைந்து போனதடா என் கனவுகள்.., என்னை நேசித்த பாவம் உன்னை சிதைக்கையில் இன்னும் நான் உன்னை வதைக்கிறேன் என்றறிந்தும்.., எப்படி உயிர்ப்பேன்..?

எழுதியவர் : SARANYA D (12-Jun-19, 10:58 am)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : nam vaazhkkai
பார்வை : 47
மேலே