என்னவள்

நிழல்கள் பல என்னை சூழ்ந்து நிற்க
நிஜமாக அவளை கண்டேன்
கண்கள் நிலவாக அவளை கண்டன
வண்ணத்துப்பூச்சியின் சிறகினை ஒப்ப இரு செவிகளை கண்டேன்
நான் தங்க மீன்களை கண்டதில்லை
அவள் கண்கள் கண்ட நேரம் தங்க மீன்களை காண கண்கள் விரும்பவில்லை
கார் மேகக் கூந்தல் காற்றினிலே தவழ அவ்வானவில் மலராக மாறிட ஏங்கும்
மண்ணில் மிதந்தாய் வானவர் வியக்க மனதில் விழுந்தாய் மாண்ணவர் மகிழ இவை அனைத்தும் உன்னிடம் கூற நான் எப்பொழுது உன்னை காண்பேனோ

எழுதியவர் : ரபி உசேன் (12-Jun-19, 2:54 pm)
சேர்த்தது : ரபி உசேன்
Tanglish : ennaval
பார்வை : 591

மேலே