இரவு, அழகிய கோயில் அம்மன்

இருண்ட இரவு காரிருள் என்று நினைத்து
கண்மூடி இருந்தால் அது வெறும் இருளே
கண்திறந்து இரவில் உதிக்கும் சந்திரன்
சிமிட்டும் தாரகைகள் மின்மினிப்பூச்சிகள் இவற்றை
இரவு நங்கையின் ஒளிதரும் ஆபரணங்கள்
என்று பார்க்கின் காரிருள் அழகிய பல
இரத்தின வைர ஆபரணங்கள் அணிந்து
ஜொலிக்கும் கோயில் அம்மனாய் காட்சிதரும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Jun-19, 4:54 pm)
பார்வை : 38

மேலே