காதல்

கற்கள் பாறையாய் மலையாய் இருக்கும் வரை
சிற்பி அதைத் தேடி வருவான் தன் கையிலுள்ள
சுத்தியும் உளியும் கொண்டு அழகி சிற்பங்கள்
வடித்திட ஆயிரம் ஆயிரமாய் நாம் கண்டு களிக்க
பூஞ்சோலைகளில் பூக்கள் பூத்திருக்கும் வரை
பூக்களைத்தேடி கரு வண்டுகள் தேடி வரும்
ரீங்காரம் இசைத்து பூக்களை மயக்கி அதிலுள்ள
தேன் உண்டு களித்து பூக்களின் மடியிலே
மயங்கி படுத்து பின் எழுந்து வேறு மலர்தேடி போகும்
இவ்வுலகில் ஆண் பெண் என்ற ஜாதி இரண்டு
இருக்கும் வரை மோகமும் காமமும் தழைத்திருக்கும்
அதில் எதிர்நீச்சல் போட்டு கரை தேறும் மனிதர்
காதல் கரை கண்டவர் மற்றெல்லாம் வெறும்
சிற்றின்பத்தில் மூழ்கி மீளாது வீணா மாய்ந்தவரே .

எழுதியவர் : (12-Jun-19, 5:14 pm)
Tanglish : kaadhal
பார்வை : 315

மேலே