திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில், பண்பொழி-------திருமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்146 2019

பண்பொழி திருமலை முருகன் கோயில்

அமைவிடம்

நாடு: இந்தியா
மாகாணம்: தமிழ்நாடு
மாவட்டம்: திருநெல்வேலி மாவட்டம்
அமைவு: பண்பொழி
ஏற்றம்: 166 m (545 ft)

கோயில் தகவல்கள்
-----------------------------
மூலவர்: முத்துக்குமாரசாமி
திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [கு 1] [1]


அமைவிடம்

தென்காசி வட்டத்தில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற இடத்தில் இக்கோயில் உள்ளது. கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில், இந்தக் கோவில் அமைந்துள்ளது.

இறைவன்
இக்கோயிலில் மூலவராக முருகன் உள்ளார். மூலவரை திருமலைக் குமாரசாமி என்றும், குமாரசாமி என்றும் அழைக்கின்றனர். [1] மலைமீது திருமலைக்காளி உள்ளார். [2]

சுந்தரர் பாடல்
“ ஈழநாட்டு மாதோட்டந் தென்னாடு ராமேச்சுரம்
சோழநாட்டுத் துருத்தி நெய்த்தானந் திருமலை
ஆழியூரன நாட்டுக்கெல்லாம் அணியாகிய
கீழையில்லாரனார்க்கிடம் கிள்ளி குடியதே.


தல வரலாறு

புளியமரத்தடியில் உள்ள வேல்

முன் காலத்தில் திருமலைக்கோயிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. இங்கு பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளியமரத்தடியில் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் கனவில் எழுந்தருளி, "பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீர் அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பாரும். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்றார். அதன்படியே பந்தளத்தை ஆண்ட அரசருக்கு தகவல் தெரிவித்த பூவன்பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார் என்பது செய்தி.[2]

அஷ்டபத்ம குளம்

அஷ்டபத்ம குளம் (அ)பூஞ்சுனை

மலை உச்சியிலுள்ள கோயிலின் தீர்த்தத்தை அஷ்டபத்ம குளம் என்று அழைக்கின்றர். இந்தக் குளத்திற்கு தற்போது பூஞ்சுனை என பெயரிட்டுள்ளனர். இலக்கியங்களில் நாம் படித்த குவளை என்னும் மலர், தினமும் ஒரு மலர் தான் இந்தக் குளத்தில் பூத்ததாம். அதை கரையில் இருந்த சப்த கன்னிமார் எழுவரும் எடுத்து முருகனை பூஜித்தனர். சப்தகன்னியர் சிலை சிவாலயங்களில் மட்டுமே இருக்கும். ஆனால், இது முருகன் தலமாக இருந்தாலும் இங்குள்ள தீர்த்தக்கரையிலும் சப்த கன்னியர் இருப்பது சிறப்பு. [2]

விசாக நட்சத்திர கோயில்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து செல்ல வேண்டும். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் வளர்ந்தன. செல்வ விருத்திக்காக, திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள். இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியவில்லை. "வி' என்றால் "மேலான' என்றும், "சாகம்' என்றால் "ஜோதி' என்றும் பொருள்படும். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் ஆயுள் முழுவதும் சென்று வழிபடுவதற்கு ஏற்றது என்பது தொன்னம்பிக்கை. [2]

--------------------
பண்பொழி (ஆங்கிலம்:Panboli),
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில், பொதிகை மலை அடிவாரத்தில் இரண்டாம்நிலை பேரூராட்சி ஆகும். பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்த இவ்வூர் குன்றில் பண்பொழி திருமலை முருகன் கோயில் உள்ளது. பண்பொழியிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தின் அச்சன்கோவில் உள்ளது.

எழுதியவர் : Wikipedia (13-Jun-19, 10:05 am)
பார்வை : 231

சிறந்த கட்டுரைகள்

மேலே