மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணுந் தனம் - நல்வழி 8

நேரிசை வெண்பா

ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணுந் தனம். 8 நல்வழி

பொருளுரை:

பூமியிலுள்ள மனிதர்களே! கேளுங்கள்;

தேடுதற்குரிய பொருள்களானவை முயற்சிகள் அளவில்லாதன வாயினும் ஊழ் கூட்டும் அளவினல்லாமல் சேராவாம்;

ஊழினாலே சேரினும் அப்பொருள் நிலைபெறாது; ஆதலினால் நீங்கள் தேடத்தகுவது மரியாதையே யாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jun-19, 8:58 am)
பார்வை : 21

மேலே