பூக்களின் ஆனந்தம்

சேலையில் பூக்கள்
சிக்கிக் கொள்ள
சிந்து பாடும் காற்று
அதில் மோதி செல்ல
அலை மோதும் அரவணைப்பில்
மொட்டுகளும் மலர்ந்திட
ஆகா/ என்ன சுகம் பூக்களுக்கு
இதமாக குளிரில் இனிய ராகம்
பாடும் வண்டின் குரல் மலர்களின் காதில்
தப்பித்தோம் பிழைத்தோம் என
ஆனந்த மிகுதியில் பூக்கள் தமக்குள்
முணுமுணுக்கின்றன, இந்த சேலை
நம் மீது போர்த்தியிராவிடில்
இந்த இனிய சுகம் காண்போமா /
அச்சமற்ற நிலையில் ஆனந்தம்,
எதிரியின் கைகளில் சிக்காது
பாதுகாக்கும் படையாக இந்த சேலை ,
ஒருநாள் வாழ்வில் ஒய்யாரமாய்
சும்மா எழில் கொஞ்ச கச்சிதமாய்
காட்சி தரும் அழகிய பூக்களுக்கும்
கட்டுக் காவல் தேவை,
பூக்களைத்தான் கொய்யாதீர்கள்
அவை பூத்துக் குலுங்க பூரித்துப் பூஜியுங்கள்

எழுதியவர் : பாத்திமாமலர் (14-Jun-19, 11:32 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : pookalin aanantham
பார்வை : 272

மேலே