தேய்வதுபோல் தோன்றி வளரும் இவை

எழுதுகோலால் எழுத எழுத
வெண் தாளில் கவிதை வரிகள்
வளருது, எழுதுகோளின் மசி கரையுது
கரையுது மசி என்று எண்ணுகிறோம்
நிஜத்தில் மசியோ கரையவில்லை
அதுதான் கவிதையாய் மாறிவிட்டது
ஓவியன் தீட்டும் ஓவியத்தில் எவ்வளவோ
மையும் வர்ணங்களும் கரைகின்றன
முடிவில் அழகிய ஓவியம் நம் கண் முன்னே
நிஜத்தில் மையும் வர்ணமும் கரையவில்லை
அவைதான் ஓவியமாய் மாறினவே
கல்லிலே சிற்பி கலைவண்ணம் காண்கின்றான்
கல் கரைவதுபோல் தோன்றும் ஆயின்
நிஜத்தில் அது அற்புத சிற்பங்களாய் மாறுதே
உளிகொண்டு கல்லை செதுக்க கல்லும்
கொஞ்சம் கரைவதுபோல் தோன்றும்
வேண்டா கொழுப்பை உடலிலிருந்து
சிகிச்சையில் அறுத்தெறிவதுபோல்
உருவில்லா கல்லில் உயிரோடும் சிற்பம்
உருவாக்குகிறான் சிற்பி ……
தேயுதுபோல் தோன்றும் திங்கள் தேய்ந்து
வளருதே நம் கண்முன் ஈசன் படைப்பு

குட்டிகளைத் தன வயிற்றில் தேக்கும்
தேள் தன முதுகை பிய்த்து குட்டிகளுக்கு
பிறப்பு தருது, ஒன்று அழிவதுபோல் தோன்ற
அதில் மீண்டும் உற்பத்தி!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Jun-19, 12:12 pm)
பார்வை : 70

மேலே