காதல் மட்டுமே வாழ்க்கையல்ல

காதல் மட்டுமே
வாழ்க்கையல்ல..!
கண்ணீர் சிந்தினால்
மீள்வதில்லை..!
கடந்தகாலம் போகட்டும்..!
எதிர்காலம் வளமாகட்டும்..!
உனக்குள் இருக்கும்
உன்னை அறிந்தால்
உலகை வெல்லும்
வலிமை கிடைக்கும்..!
நடப்பவை அனைத்தும்
நன்மைக்கென்று நம்பி
வாழ்ந்தால் நிறைவு கிடைக்கும்..!
கவலைகள் மறந்து
வாழ்க்கையை நகர்த்து..!
கடவுளின் துணையுண்டு
வாழ்க்கையைத் துவங்கு..!
நமக்கும் கீழே இருப்பவரை
எண்ணி இருப்பதை வைத்து
மகிழ்ந்துகொள்ளு..!
எல்லா நிகழ்வுகளுக்கும்
காரணம் உண்டு..!
சோதனை வருவது
சாதிக்கத் தானே..!
தாமதமாய்க் கிடைப்பவை
உயர்ந்தவையாகவே கிடைக்கும்..!
பாவமும் புண்ணியமும்
வாழ்க்கையைத் தீர்மானிக்கும்..!
வலியும் வேதனையும்
போராடிவாழக் கற்றுக்கொடுக்கும்..!
எதுவும் நிரந்தரம்
இல்லையென்பதை உணர்ந்தால்
பற்று அற்றுப்போகும்..!
வாழ்வதற்கு உன் மனம்
தயாராகும்போதே பிரபஞ்சம்
அதற்கான சூழ்நிலையை
உருவாக்கும்..!
காதல் மட்டுமே வாழ்க்கையல்ல..!
காதல் வாழ்க்கையின் ஒரு பகுதி..!
காதலைத் தாண்டியும்
வாழ்வதற்கு நிறைய
காரணங்களுண்டு..!

எழுதியவர் : தீபி (15-Jun-19, 12:30 am)
பார்வை : 368
மேலே