ரகுவும் சில மனிதர்களும்

காலம் கடந்து ரகு கல்லூரியில் சேர்ந்தான்.இவனுடன் படித்த நண்பர்கள் அக்கல்லூரியில் பேராசிரியர்களாகப் பணிபுரிப்துகொண்டிருந்தனர்..பத்து பெண்கள் இருந்த வகுப்பறையில் இவன் மட்டும் ஒரே ஆண்..பேராசிரியர்கள் முதல்கொண்டு மாணவர்கள் வரை அனைவரும் ரகுவை சார் சாரென்றே அழைப்பார்கள்..வகுப்பறையைவிட நூலகத்தில்தான் ரகு அதிகம் இருப்பான்..ராகவி என்றொரு பேராசிரியை ரகுவின் வகுப்பு பிரிவிற்கு பாடமெடுப்பது வழக்கம்..பாடம் எடுத்துக்கொண்டே இருப்பார் திடீரென கண்கலங்கி அழுவார்.பாடமெடுக்காமல் போய்விடுவார்..எல்லோரும் என்ன பிரச்சினையென்று அறியாமல் குழம்பிப்போவர்..ஒருநாள் ரகுவைக் காண துறைத்தலைவரும் கல்லூரி நண்பருமான ராமன் நூலத்திற்கு வந்தார்..ரகு உன்ன டிஸ்டர்ப் பன்றதா நினைக்க வேணாம் ஒரு ஹெல்ப் என்று ராமன் கேட்டான்..சொல்லுடா முடிஞ்சா செஞ்சிரலாம்னு ரகு சொன்னான்..ஒன்னுமில்ல இந்த ராகவி மேடம் பிரச்சனைபத்தி உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.நீதான் ஒருநல்லவழி சொல்லனும்.அவங்களுக்கு 30 வயதாகியும் இன்னும் மேரேஜ் செட் ஆகலன்ற கவலை.ரொம்ப அப்செட்டா இருக்காங்க.பயமா இருக்கு..நீதான் எப்படியாவது அவங்கள மோட்டிவேட் பண்ணி கொஞ்சம் பேசனும் என்றான் ராமன்..மெதுவாக சிரித்தான் ரகு.."ராம் அவங்க வயசுல பெரியவங்க..அதுவும் இந்த விஷயத்த பத்தி நான் என்ன பேசமுடியும் அவங்ககிட்ட..அதுவும் மேரேஜ் டாபிக்க பத்தி பேச எனக்கு என்ன தகுதி இருக்கு சொல்லு." என்றான் ரகு.."டேய் நீ பேசினா பிரச்சினை என்னனு தெரியவரும் டா..அவங்ககிட்ட நான் பர்மிசன் வாங்கிட்டேன்.நீ பேசுவன்னும் சொல்லிட்ன்.அவங்க லாப்ல வெயிட் பன்றாங்க வா போகலாம் ப்ளீஸ்" என்றான் ராம்.."உன் கூட பெரிய தொல்லையா போச்சு போடா.நட.போய் பேசலாம்" என புறப்பட்டான் ரகு..
லாப் கதவருகே ராகவி மேடம் நின்றுகொண்டிருந்தார்..ரகு வணக்கம் தெரிவித்தான்..ரகுவும் ராமும் ராகவி மேடத்திடம் பேச ஆரம்பித்தனர்..ரகு குடும்பப் பின்னணியை விசாரித்துவிட்டு" ஏன் மேடம் இதுக்கெல்லாம் அப்செட் ஆகலாமா..?இன்னைக்கு இல்லாட்டி நாளைக்கு வரன் வந்துட்டா எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துடப்போகுது.இதுக்குப்போய் காலேஜ்ல எல்லாமா அழுவீங்க..பாருங்க இவன் தொல்லை தாங்கல.உங்களுக்கு அட்வைஸ் பன்ன என்னை கூப்பிடுகிறான் என்றான்.." இல்லை ரகு நானும் என் தோழியும் ஒரு ஜோதிடரிடம் சென்றோம்..அவர் ஜாதக நோட்டை திறந்து பார்த்ததும் மூடிவிட்டு இந்த ஜாதகத்திற்கு திருமணமே நடக்காது என்று கூறிவிட்டான்..அதுதான் என்னால் தாங்கமுடியவில்லை..நான் எதுக்காக வாழனும் என்று அழுதார் ராகவி மேடம்."அட நீங்கவேற மேடம்.உங்க ஜாதகத்த கொடுங்க நான் பார்க்கிறேன் என்றான் ரகு..மொபைலில் வைத்திருந்த ஜாதகத்தை ரகு பார்த்து கணக்கிட்டான்..அதிர்ந்துபோனான்.ஜோதிடர் சொன்னது போலத்தான் ஜாதகம் இருக்கிறது.ஆனால் ரகு மறைத்துவிட்டான்..பொய்யாக சிரித்துக்கொண்டே ரகு சொன்னான்.."மேடம் அந்த ஜோதிடர் ஒரு டுபாக்கூர்..உங்கள சும்மா பயமுறுத்திட்டான்..உங்களுக்கு வரப்போகும் ஜனவரில கல்யாணம் நடக்கும்.இது நான் கும்பிடுற அந்த முருகன்மேல சத்தியம்".மேடம் முகத்திலும் ராமன் முகத்திலும் அளவில்லாத மகிழ்ச்சி..உண்மையாவா சொல்றீங்க ரகு என்றார் ராகவி.."உண்மையாத்தான் சொல்றேன்..ஆனால் அதுக்குமுன்னாடி உங்ககிட்ட சில உண்மைகளை கேட்கனும்.மறைக்காம பேசனும்னு ரகு சொல்ல..ராகவி ஒப்புக்கொண்டார்.."உங்க அப்பா யாரோட காதலையாவது பிரிச்சதுண்டா என ரகு கேட்டான்.."ஆமா என் பெரியப்பா பெண்ணோட காதல பிரிச்சு அவளுக்கு பிடிக்காத ஒருத்தருக்கு கட்டிவச்சாரு.ஆனா அவ இப்போ நிம்மதியா இல்லை" என்றார் ராகவி.."சரி உங்க தாத்தா என்னவா இருந்தார்.? என்றான் ரகு.."என் தாத்தா சாமியாரா இருந்தார்..என்னோட பாட்டி வேற ஒருத்தரோட ஓடிப்போய்ட்டாங்கன்ற விரக்தில அவர் சாமியார் ஆகிட்டார்னு சொன்னார் ராகவி.."சரி உங்கவீட்ல கல்யாணம் ஆகாம யாரேனும் இருக்காங்களா? "என ரகு கேட்டான்..."ஆமா என்னோட சித்தி ஒருத்தர் மனநிலை சரியில்லாம இருக்காங்க.என்னோட அப்பா அவங்களுக்கு கவனிச்சு கல்யாணம் பண்ணி வைக்கல.அதனாலேயே அவங்க பைத்தியம் மாதிரி ஆகிட்டாங்க..எங்க வீட்லதான் இருக்காங்க..ஆனா அவங்களுக்கு என்னைப்பார்த்தா பிடிக்காது.எரிஞ்சு எரிஞ்சு விழுவாங்க "என்றார் ராகவி..."ம் ஓகே...பிரச்னை எங்கன்னு கண்டுபிடிச்சுட்டேன் மேடம்..நீங்க மொதல்ல உங்க தாத்தா கிட்ட வேண்டிக்கனும்.ரெண்டாவது உங்க சித்திக்கு ஒரு புடவை எடுத்துக்கொடுத்து அவங்க கால்ல விழுந்து கும்பிடுங்க.அவங்க சந்தோஷப்படுறமாதிரி நடந்துக்கோங்க.கடைசியா உங்க அப்பாவால பிரிக்கப்பட்ட அந்த காதல்ல பாதிக்கப்பட்ட அந்த பொண்ணுக்கு எதாவது உதவி செய்ங்க..இது மூணு செய்ங்க.ஜனவரி மாசத்துல நல்ல வரண் வரும்"என்றான் ரகு.."என்ன ரகு கண்ணாடிய திருப்பினா ஆட்டோ ஓடும்ன்றமாதிரி சொல்றீங்க என கேலியாக சிரித்தார் ராகவி மேடம்.."மேடம் உலகத்துல மனித மனத்திற்கு இருக்கிற சக்தி வேற எந்த சக்திக்கும் இல்ல..முக்கியமா பாதிக்கப்பட்ட மனங்களால சுத்தி இருக்கிற சிலருக்கு பிரச்னை தொடரும்..ரெண்டாவது ஜீன் கேட்டகரி பிராப்ளம்..மூணாவது பாவ புண்ணியக் கணக்கு...மனம் நினைத்தான் ஜாதகத்தையே மாத்த முடியும்.விதியை மாத்தனும்னா எந்த கர்மாவின் விளைவால இந்த விதி வந்திருக்குனு ஆராயனும்..உங்க அப்பா செஞ்ச பாவத்தால பாதிக்கப்பட்ட அந்த ரெண்டு பெண்களோட நிம்மதியில்லாத மன அதிர்வுகள் உங்கள இப்டி பாடுபடுத்துது.இவ்லோதான் மேட்டர்..அதேபோல நீங்க முதல்ல உங்க பழைய லவ்வரோட சிந்தனையை தூக்கிப்போட்ருங்க மேடம்.உங்க சிந்தனையும் மனசும் காலியா இருந்தாதான் அதுலா புதுசா ஒருத்தரோட உணர்வலைகள் உள்ளே வரமுடியும்.பின்னர்தான் உங்களுக்கு திருமணம் நடக்கமுடியும் "என்றான் ரகு.."ரகு என்னோட பழைய லவ்வர பத்தி உங்களுக்கு யார் சொன்னது என்று அதிர்ச்சியோடு கேட்டார் ராகவி.."மேடம் உங்க ஜாதகம் பார்த்தாலே நான் உங்க ஹிஸ்டரியே எடுத்துடுவேன்.அதுக்கும்மேல பார்வையிலயே யார் எப்படினு கண்டுபிடிச்சுடுவேன்..சோ யாரும் எனக்கு சொல்லவேண்டியது இல்லை.அப்புறம் கருப்பு பொட்டு எடுத்துட்டு பெருசா குங்குமப் பொட்டு வச்சுக்கோங்க.தலைக்கு அடிக்கடி எண்ணெய் வைங்க.அப்போதான் மூளை சரியா வேலை செய்யும் " என்றான் ரகு.."அப்பாடா ஒரு அரைமணி நேரத்துல அஞ்சாறு வருஷ பிரச்சினைய தீர்த்துட்டயேடா சாமி..அதுக்குத்தான் உன்னை கூப்பிட்டேன்..போதுமா மேடம்..இனிமே நிம்மதியா பாடம் நடத்துங்க.."என்றான் ராமன்..ரகு சொன்னதைப்போலவே ஜனவரி மாதம் அரசு உத்தியோகத்திலிருக்கும் மாப்பிள்ளையோடு நிச்சயம் நடந்தது ராகவி மேடம்க்கு...திருமண அழைப்பிதழ் கொடுக்கவேண்டும் ரகுவின் நம்பர் கொடு ராம் என ராகவி மேடம் கேட்டார்..."மேடம் அவன் யாருடை திருமணத்திற்கும் வருவதில்லை..ஒரு ஐந்து வருஷங்கள் ஆயிருச்சு..அவனோட காதலிக்கு திருமணம் ஆன நாள்ளேர்ந்து ரொம்ப நாளா வெள்ளை சட்டை மட்டும் போட்டுகிட்டு அந்த முருகனே வாழ்க்கைனு வாழ்ந்துனு இருந்தான்..திடீர்னு எனக்கு போன்பண்ணி நான் மேலப்படிக்கனும்னு நினைக்கிறேன்.உன் காலேஜ்ல வாய்ப்பு கிடைக்குமானு கேட்டான்...நான்தான் இங்கே சேர்த்துவிட்டிருக்கேன்..நீங்க தொல்லை பண்ணப்போய் காலேஜ்கு வராம நின்னுடபோரான்...வேண்டாம் பத்திரிகைலாம்.நான் கூப்பிட்டு பார்க்கிறேன்.வந்தா நம்ம லக்" என்றான் ராமன்.."விழியோரம் கசிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு அமைதியாக நகர்ந்தார் ராகவி மேடம்...

எழுதியவர் : தீபி (15-Jun-19, 2:02 am)
சேர்த்தது : தீபி
பார்வை : 105

மேலே