கூட்டம் கூட்டம்

என்னை சுற்றி...
பிறக்கும்போதும் ஒரு கூட்டம் இறக்கும்போதும் ஒரு கூட்டம்
இறந்து புதைத்தபின் அட அங்கும் ஓர் சடலக்கூட்டம்
வாழும் போதேனும் சற்று அகண்ட பார்வையும்
எந்த சடலக்கூட்டத்தில் புதைக்கப்படவேண்டும் என்ற
பிற்போக்கு சாதி உணர்வும் எந்த கடவுளின் கூட்டத்தில்
இருக்க வேண்டும் என்ற அர்த்தமற்ற மத உணர்வும் இன்றி
கடமையைத் தலையில் சுமந்து அன்பை நெற்றியில் சுமந்து
நேர்மையைக் கழுத்தில் சுமந்து இறைவனை நெஞ்சில் சுமந்து
மனிதனாகவும் வாழலாம்..

எழுதியவர் : ரா.சா (15-Jun-19, 4:56 am)
சேர்த்தது : ராசா
Tanglish : koottam koottam
பார்வை : 355

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே