தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 400 ஆவது மாதக்

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 400 ஆவது மாதக் கவியரங்கை ஆகஸ்ட் மாதம் நடத்தயிருப்பதை முன்னிட்டு 400 கவிஞர்களையும் அவர்தம் கவிதைகளையும் "கவி நானூறு" என்ற நூலாக வெளியிட உள்ளது. இச்சங்கம் 402 கவிஞர்கள் ஆசிரியர்களாக இணைந்து படைத்த "கவி விசை" என்ற மின் நூலினை வெளியிட்ட சிறப்பிற்குரியது ஆகும். இந்த நூலில் இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் இணைந்து வரலாற்று சிறப்பு மிக்க நூலில் இடம் பிடித்தவண்ணம் உள்ளனர். ஆகவே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர்கள் கவிஞர் என்ற அங்கீகாரத்தோடு தலை நிமிரவும், கவிஞர்களாக இருப்பவர்கள் இப் படைப்பின் மூலம் தனித் திறமையைக் காட்டவும் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் களம் அமைத்து தந்துள்ளது. இதில் பங்கேற்கும் கவிஞர்களை பிரபல பாடலாசிரியர் ஒருவரால் கொளரவிக்கப்பட்டு விருது சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. மேலும் இது இக்காலத்தில் இத்தனைக் கவிஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை வருங்காலத்திற்கு பதிவு செய்யும் நூலாகவும் அமையும் என்பதால் கவிஞர்கள் பலரும் பெரும் எழுச்சியாக இதில் பங்கேற்கிறார்கள். இது பற்றி சங்கத்தின் பொதுச்செயலாளர் கவிஞர் க.ச.கலையரசன் அவர்கள் கூறும் போது, நானூறாவது மாதக் கவியரங்கை 400 கவிஞர்களோடு கொண்டாட சென்னையில் விழா ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தொடர்ந்து 77 மணி நேரம் கவிஞர்கள் கவிதை பாடி உலக சாதனைப் படைத்த அமைப்பு இது என்பதால் கவிஞர்கள் பலர் பேரெழுச்சியாக இதில் கலந்து கொள்வதைப் பார்க்கும் போது மொழிப்பற்றும் மொழியறிவும் இளைய தலைமுறையினரிடமும் பரவியுள்ளதைப் பார்க்க முடிகிறது. மகிழ்ச்சி அடைகிறேன். இதில் எந்த ஒரு கவிஞரும் விடுபட்டு விடக் கூடாது என்பதற்காக அனைத்து கவிஞர்களையும் ஒன்றிணைக்க இருப்பதாகக் கூறினார்.

கவிதை வாய்ப்பு


பதிவு : செ.பா.சிவராசன்
நாள் : 14-Jun-19, 2:36 pm

எழுதியவர் : பதிவு : செ.பா.சிவராசன் (15-Jun-19, 5:37 am)
பார்வை : 23

சிறந்த கட்டுரைகள்

மேலே