லாலு லோலு

ஏன்டப்பா கண்ணப்பா....
@@@@@@@
என்னம்மா?
@@@@
மொதப் பொறந்த பையனுக்கு 'லாலு'ன்னு பேரு வச்ச. கேட்டதுக்கு அந்தப் பேருக்கு அர்த்தம் தெரியாதுன்னு சொல்லிட்ட..இப்பா ரண்டாவதும் ரண்டு வருசம் கழிச்சுப் பையனா பொறந்திருக்குது. இந்தப் பையனுக்காவது தமிழ்ப் பேரை வையுடா.
@@@@@
அதெல்லாம் முடியாதும்மா. நம்ம தமிழ்ச் சமுதாயமே தமிழ்ப் பேரை குழந்தைகளுக்கு வைக்கிறதக் கேவலமா நெனைக்குது. எந்தக் குழந்தை பேரைக் கேட்டாலும் இந்திப் பேரா இருக்குது. எம் பையனுக்குத் தமிழ்ப் பேரை வைக்கணும்னு எனக்கு தலையெழுத்தா? மொதப் பையன் 'லால்'. ரண்டாவது பையன் 'லோல்'. இதுதான் என்னோட முடிவும் என் மனைவி பூங்கோதை முடிவும். அந்த ஆண்டவனே வந்தாலும் எங்க முடிவை மாத்தமுடியாதும்மா.
@@@@@
என்ன அநியாயம்டா மகனே. 'லாலு', 'லோலு' பெத்த புள்ளைங்களுக்கு வைக்கிற பேருங்களா இது? வெக்கக் கேடுடா. வெக்கக் கேடு.
■■■■■■■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆
Lal = lovely, beloved, dear one, red colour.
(Sanskrit origin) Unisex name.
Lol = sorrows, Lucifer our Lord (LOL), loud out loud, be amused, lots of love.
(Indian, Egyptian, English, Hawaiian, Spanish, African origin) Unisex name.

எழுதியவர் : மலர் (15-Jun-19, 7:21 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 65

சிறந்த நகைச்சுவைகள்

மேலே