தந்தையர் தினம்

ஆயிரம் தடைகள் வந்தாலும்
தான் பெற்ற பிள்ளைகளை எண்ணி
நாள் தோறும் அவர்களின்
தேவைகளை தன்னால் முடிந்த வரை
நிறைவேற்ற வேண்டும் என்று உழைத்து
குடும்பத்தின் இதயமாக துடிக்கும்
அப்பாவிற்கான ஒருநாள்...

அவருக்கென்று தனியான ஆசைகள் இல்லை
அவரது உலகம் மிகச் சிறியது
அவர் கண்டிப்போடு பேசும் தோரணையும்
அவர் அன்பின் வெளிப்பாடு தான்
அவர் கோவத்தில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்
அவர் எவ்வளவு திட்டினாலும்
அடுத்தவர் முன் என்றுமே
தன் பிள்ளையை விட்டு கொடுத்தது இல்லை
தாயின் பாசம் புரிந்த அளவிற்கு பலருக்கு
தந்தையின் அன்பு தெரிவதில்லை
அவர் எதற்கும் எளிதில் கலங்கி விடுவதில்லை
ஆனால் பெற்ற பிள்ளைகளுக்காக
எந்த எல்லையையும் கடக்க தயங்கியதும் இல்லை
பெற்ற பிள்ளைகளுக்கு எத்தனை வயது ஆனாலும்
அவர்களுக்கு எப்போதும் அவர் அப்பா தான்
ஆனால் அவருக்காக நேரத்தை கொடுக்க
நாம் பல சமயங்களில் மறந்தே விடுகிறோம்
இன்று ஒருநாளாவது அவரை மகிழ்விப்போம்
இனிய வார்த்தைகளால் வாழ்த்தி....

எழுதியவர் : ஸ்டெல்லா ஜெய் (16-Jun-19, 9:35 am)
சேர்த்தது : ஸ்டெல்லா ஜெய்
Tanglish : thantaiyar thinam
பார்வை : 175

மேலே