இறையன்பு கருவூலம் நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி பாராட்டுரை மெர்வின்

இறையன்பு கருவூலம் !


நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !பாராட்டுரை : மெர்வின், ஆசிரியர் : 100 நூல்கள்,
தமிழ்நாடு அரசு முதல் பரிசு பெற்ற எழுத்தாளர், வாழ்வியல் பயிற்சியாளர்.

45-A, 6ஆவது குறுக்குத் தெரு, குமரன் குடில் அனக்ஸ், துரைப்பாக்கம், சென்னை-600 097. செல் : 73972 63603வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு,

தியாகராய நகர், சென்னை-600 017.
பக்கங்கள் : 152, விலை : ரூ.110.*******

கவிஞர் இரா. இரவி திறனாய்வு செய்த இறையன்பு கருவூலம் என்ற நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கவிஞர் மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறார். இறையன்பு எழுதிய எல்லா நூல்களுமே மேன்மையானவை.கட்டுரை நூல்களை எழுதுவதில் வல்லவர், வலிமை மிக்கவர், சொல்ல வேண்டிய கருத்துகளை மனதில் பதியும்படி எழுதுவதில் ஆற்றல் மிக்கவர்.மூளைக்குள் சுற்றுலா என்ற இவருடைய படைப்பு மிகவும் உயர்வானது, மூளையை ஆக பற்றி ஆராய்ந்து அறிந்து எழுதி இருக்கும் தன்மை போற்றத்தக்கது, புகழ்த்தக்கது.காகிதம் என்ற நூலம் புதுமையானது. காகிதம் பற்றிய அரிய செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது.தேனை எப்படி சாப்பிட்டாலும் இனிப்பாகத் தான் இருக்கும். அதுபோல இவருடைய அனைத்து நூல்களும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகத் தான் இருக்கும்.இறையன்பு அதிகாரியாக இருந்தாலும் நூறு நூல்களை எழுதி இருப்பது மாபெரும் மகத்தான சாதனை!கவிஞர் இரவியின் நூல்களைப் பற்றியும் மதிப்பீடு செய்து இருப்பது போற்றத்தக்கது. புகழத்தக்கது, வரவேற்கத்தக்கது.தொடரட்டும் இவருடைய இலக்கியப் பணி, மலரட்டும் புதிய எழுச்சி அணி!


.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (16-Jun-19, 6:24 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 35

மேலே