விமர்சனங்கள் ---------சிகரத்தில் ஏறும் இயற்கை ஆர்வலர்களின் வாகனம்

2 Comments

R.Nanjappa (@Nanjundasarma) / June 16, 2019
இந்தியா ஒரு விசித்திரமான நாடு. இங்கு இயற்கை தந்த பல அற்புதங்கள் இருந்தும் , எளிமையான சுலபமான வழிகள் பல இருந்தும் நாம் அவற்றை விட்டுவிட்டோம்.எங்கும் எதிலும் ரசாயனப் பொருள்கள் கலந்துவிட்டன. கால்குலேடர்,கம்ப்யூடர் வந்தபிறகு மனக்கணக்கு போய்விட்டது. பெரிய கடைகளில், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் நான்கு அயிட்டங்களின் விலையை கம்ப்யூடர் இன்றி கூட்டத் தெரியாது. இன்றைய பட்டதாரிகளுக்கு சரியான தமிழ், ஆங்கில உச்சரிப்போ வராது. கையெழுத்தும் கிறுக்கல் தான். டூத் பிரஷ் முதல் எந்தப் பொருளையும் சரியாக பயன்படுத்தத் தெரியாது.
செல்ஃபோன் வந்தபிறகு கடிதம் எழுதும் பழக்கம் மறைந்துவிட்டது. செல்ஃபோன் கெடுதல் என்பது பலருக்குத் தெரியாது. அதிலிருக்கும் அபாயத்தை வேண்டுமென்றே மறைக்கிறார்கள். தெரிந்தவர்களும் அதை சட்டை செய்வதில்லை. புகை பிடிப்பது தவறு என்று தெரியும் ஆனால் படித்தவர்கள் புகை பிடிப்பதை நிறுத்தவில்லை. கார் போன்ற வாகனங்களால் ஏற்படும் சுகாதார, பிற கேடுகளும் இப்படித்தான். அவை இயற்கைக்கும் நமக்கும் விளைவிக்கும் கேடுகள் தெரிந்தாலும் அதைத் தடுக்கவோ குறைக்கவோ எந்த அரசும் துணியவில்லை.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மூன்று.
– எந்த மாற்றத்தையும் முன்னேற்றம் என்று கருதும் மனப்பான்மை.
-மேலை நாட்டினர் செய்வதைப் பின்பற்றுவதுதான் நாகரிகம் என்னும் எண்ணம்.
– இன்றைய பொருளாதார முறையில் அதிக செலவுதான் GDP பெருக உதவும் என்னும் மடமை.
இந்தியாவில் எளிமை என்பது இன்று ஏழ்மையின் சின்னமாகக் கருதப்படுகிறது. கார் போன்ற வாகனங்கள் போய், சைக்கில் வந்தால் GDP குப்பென்று கவிழும்! Motorised two wheelers, கார் போன்றவை நம்மவர்களுக்கு முன்னேற்றத்தின் சின்னமாகத் திகழ்பவை.. இந்தியர்கள் இவற்றை விடமாட்டார்கள்!
அரசினரின் மடமையைப் பாருங்கள். மோட்டார் வாகனங்களுக்காக சாலைகள், Highways விரிவாக்கப்படுகின்றன. லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாழாகின்றன, லட்சக் கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. இன்னும் ஒரு விமான நிலையம் அமைக்க 500 முதல் 1000 ஏக்கர்வரை நிலம் தேவைப்படுகிறது, மோடி சர்க்கார் 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டம் போடுகிறார்கள். எவ்வளவு லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாழாகும்? எவ்வளவு மரங்களும் ஏரிகளும் போகும்? யாருக்குக் கவலை? GDP ஏறினால் சரி! இது தான் முன்னேற்றம் என்பது நமது சர்க்கார் கொள்கை. பின் சைக்கிள் எப்படித் திரும்பி வரும்? இன்று நடப்பது கவர்ச்சி அரசியல், பரபரப்புப் பொருளாதாரம். ஆக்கபூர்வமான அறிவியலுக்கு இடமில்லை.
The humble bicycle may be a symbol of sanity, but the motorised vehicle is the sign of ‘progress’!


Santhanam Nagarajan / June 16, 2019
சிலராவது கவலைப் படுகிறார்கள்! பெர்ட் ரண்ட் ரஸ்ஸல் அடுத்த உலக மகா யுத்தம் கத்தி கம்புடன் தான் நடைபெறும் என்றார். பழைய கால – கற்கால நிலைக்கே விஞ்ஞானம் நம்மை அழைத்துச் செல்கிறது என்பது அவரது அபிப்ராயம். ஐன்ஸ்டீன் கூட விஞ்ஞான முன்னேற்றம் பற்றி – அணுகுண்டு போடப்பட்ட பின் கவலைப் பட்டார். ஆலிவர் சாக்ஸ் உள்ளிட்டோர் கவலைப் படுகின்றனர்.
இந்தியா நினைத்தால் வழி காட்டலாம் – சைக்கிளைப் பயன்படுத்துவது உட்பட! நல்லதோர் தலைவரை பாரத மாதா தந்தருள்வாளா? அருள வேண்டும். வேண்டுவோம் தங்களின் பதிவிற்கு நன்றி!

எழுதியவர் : (16-Jun-19, 10:13 pm)
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே