கடவுளாய் இருப்பது எளிது

கடவுள் என்பது எல்லாவற்றையும் கடந்து நிற்பதும் எல்லாவற்றுக்குள்ளும் நிறைந்து நிற்பதும் ஆகும்.

அப்படியெனில் கடவுள் என்பது "வெளி".

வெளி தான் எல்லாவற்றையும் கடந்தும் எல்லாவற்றுக்குள்ளும் நிறைந்தும் இருப்பது.

அப்படியெனில் ஆகாயவெளியில் தோன்றிய அனைத்தும் கடவுள். ஆகாயமும் கடவுள்.

பூமி ஆகாயவெளியில் தோன்றியதால் பூமியும் பூமியில் தோன்றிய எல்லாமும் கடவுள்.

அதாவது எதுவும் எங்கும் மிச்சமில்லாமல் அனைத்தும் கடவுளே.

அனைத்தும் கடவுளானபிறகு எதை விடுத்து எதனை வணங்குவது ?

வணங்கினாலும் வணங்காவிட்டாலும் என்ன பயன் ?

எனவே இயல்பாய் இயற்கையாய் இருப்பதே கடவுளாய் இருப்பது.

கடவுளாய் இருப்பது கடினம்தான். ஆனால் இருந்துவிட்டால் கடவுளாய் இருப்பதுதான் மிகமிக எளிது.

எழுதியவர் : நவீன் இளையா (16-Jun-19, 11:29 pm)
சேர்த்தது : நவீன் இளையா
பார்வை : 56

சிறந்த கட்டுரைகள்

மேலே