அறிவியல்புனைகதைகள் -கடிதங்கள்

ஜெ



பாரி மொழிபெயர்த்த ரே பிராட்பரியின் முழுக்கோடையும் ஒரே நாளில் சிறுகதை வாசித்தேன். சிறுமி மார்கட் சூரியனை தரிசிக்க முடியாமல் போய்விட்டது வருத்தமாக இருந்தது. கோபமாகவும் தான், என்ன செய்ய குழைந்தைகள் அப்படித்தான் இருப்பார்கள். ஏழாண்டுகள் காத்திருக்க வேண்டும்.

ஒயாது மழை பொழியும் வீனஸ் கிரகத்திற்கு சென்று இருள் முகில் சற்றே விலக கதிரொளி காண வாய்க்கப்பெற்றேன்.
பாரி தான் ரசிக்கும் எழுத்துக்களையே மொழிபெயர்க்க வேண்டும். அப்போதுதான் இதுபோல நியாமான மொழிபெயர்பாளர் என எழமுடியும்.
அன்புடன்,

விக்ரம்,
கோவை


-----------------
ஜெ



பாரி மொழியாக்கம் செய்துவரும் அறிவியல்புனைகதைகள் புதிய வாசிப்பனுபவத்தை அளிக்கின்றன. இந்தக்கதைகளை நாம் ஆங்கிலத்திலேயே வாசிக்கமுடியும்தான். அவை நமக்கு இன்னும் சிறந்த அனுபவத்தையும் அளிக்கக்கூடும். ஏனென்றால் அறிவியலை நாம் ஆங்கிலத்திலேயே படித்திருக்கிறோம். ஆனால் இந்தவகையான மொழியாக்கங்கள் வழியாகத்தான் இங்கே அறிவியல்புனைகதைகளை எழுதுவதற்கான மொழி உருவாகி வருகிறது. இவ்வாறுதான் நாம் நமக்குரிய தனிமொழிகளை உருவாக்கிக்கொள்கிறோம். பாரி அந்தச்சவாலை சந்திக்கிறார்



டி.எஸ்.ராமச்சந்திரன்

------------

ஜெ



அறிவியல்புனைகதை வரிசையில் ஸ்டீபன் லீகாக் அவர்களின் கதையைச் சேர்க்கமுடியாது. அது ஒரு கனவு என்று அவரே சொல்கிறார். அறிவியல்புனைகதைகளில் இருக்கும் டிஸ்டோப்பியன் பார்வையை அதிலும் காணலாம். ஆனால் ஆங்கிலத்திலுள்ள பெரும்பாலான ஃப்யூச்சரிஸ்டிக் கதைகளில் அந்த டிஸ்டோப்பிய அம்சம் உண்டு. அது அவர்களின் மதநம்பிக்கையின் வேறுவடிவம். அந்த டிஸ்டொப்பியத்தன்மை ஃப்ராய்டிலும் உண்டு. ஒருவகையில் டார்வினிடம்கூட உண்டு. ஆகவே அதை அறிவியல் என்று சொல்லமுடியாது



ஜெயக்குமார்

எழுதியவர் : ஜெ மின்னஞ்சல் (17-Jun-19, 6:00 am)
பார்வை : 63

மேலே