என் தந்தைக்கு தந்தை தின வாழ்த்துக்கள்

முகம் அறியா பருவத்தில்
முழுமதியாய் ஆனாயே.....
விரல் பிடித்து நடக்கயிலே
விடை கொடுத்து போனாயே.....
உன் உடல் சோர்வு உற்றபோது
உணரும் வயதில் நான் இல்லை.....
உணரும் வயது வந்தபோது
உடன் இருக்க நீ இல்லை.....
அன்னையிடம் காட்டியதில்லை
தந்தை இழப்பின் ஏக்கத்தை.....
அவளும் என்னிடம் காட்டியதில்லை
உன் இழப்பின் சோகத்தை.....
காலனுக்கும் கருணை இல்லை
கண்கொண்டும் பார்க்கவில்லை.....

கதைகளிலே படித்ததுண்டு
மறுபிறவி..... மறுஜென்மம்.....
நான் கடவுளிடம் கேட்டதெல்லாம்
ஒரு பிறவி உன்னோடு.....
கருணையில்லா இக்கடவுளுக்கு
மாலை எதற்கு..... பூஜை எதற்கு.....

என்னுடன் இருக்கும் தோழிகள்
அவரவர் தந்தைக்கு வாழ்த்து கூற.....
உடனுக்குடனே ஓடிவந்து
நானும் சொன்னேன் வாழ்த்துக்களை.....

என்னுடன் இருக்கும்.....
உன் புகைப்படத்திற்கு.......................

எழுதியவர் : அஞ்சலி (17-Jun-19, 12:43 pm)
சேர்த்தது : அஞ்சலி
பார்வை : 31

மேலே