நான்தான் உன்

என்னை பார்த்து நடக்கிறாய்...
என்னை மிதித்து நடக்கிறாய்...

நான் சுமக்கும் தானியங்களை
நீ உண்டு உடல் வளர்த்து
உயிர் வாழ்கிறாய்...

கொடும்பாவி எரிப்பது,
தேசியக் கோடி எரிப்பது என
அத்தனை அநியாயங்களையும்
என் மீது நடத்துகிறாய்...

எச்சில் துப்புவதில் ஆரம்பித்து
அசிங்கத்தை கொட்டுவது வரை
உனது அனைத்து குப்பைகளையும்
என் மீது கொட்டுகிறாய்...

என் மீது ஏறி நின்று கொண்டுதான்
தாய் முதல் மனைவி வரை
எல்லோரையும் அடுத்தவரிடம் நீ
குறை சொல்கிறாய்...

ஓர் நாள்
உன் விதி முடியும்போது
என்மீதே எரிந்து சாம்பலாகிறாய்...

இதையெல்லாம் சொல்வது யார்??..

கை கொட்டிச் சிரிக்கும் நான்தான்,

உங்கள் எல்லோரையும் தாங்கும்
நான்தான்
நிலம்....

எழுதியவர் : சாந்தி ராஜி (17-Jun-19, 1:18 pm)
Tanglish : naanathaan un
பார்வை : 225

மேலே