பிரம்மனின் பிரத்யேக ஓவியம்

இசையின்றி இவள் கேட்டிடும்
---- பாடல்
அன்பன் பேச்சுக்கள்….

மொழியின்றி இவள் புரிந்திடும்
---- கவிதை
அன்பன் புன்னகை…

சீண்டலின்றி இவள் சிலிர்த்திடும்
---- தருணம்
அன்பன் கேசச் சிலும்பல்…

இலக்கணமின்றி இவள் படித்திடும்
---- மொழி
அன்பன் உடல்மொழி…

வல்லினமின்றி இவள் உணர்ந்திடும்
---- காற்று
அன்பன் மூச்சுக்காற்று…

தாளமின்றி இவள் ரசித்திடும்
---- நடனம்
அன்பன் கைஅசைப்புகள்..

முடிவுரையின்றி இவள் வாசித்திடும்
---- புத்தகம்
அன்பன் நேசம்…

இவளுக்காக,
தூரிகையின்றி பிரம்மன் தீட்டிய
பிரத்யேக ஓவியம் - இவளின்
காதல் பிரியன்!!!

எழுதியவர் : காதம்பரி (17-Jun-19, 1:19 pm)
பார்வை : 277

மேலே