பணம் என்னும் காதலி

தாயின் கருவறை விட்டிறங்கி
மேதினியின் மேனியில் புரண்டெழுந்து தொடர்கிறது வாழ்க்கை.

அன்னையின் பால் உண்டு
தந்தையின் அறிவு அமுதுண்டு
ஆசானின் உலகறிவு பெற்றுண்டு
தன் வாழ்க்கை பயணம் கான
மனிதம் செல்கிறது.

இப்பயணமதில் சந்திக்கிறாள்
பணம் என்னும் காதலி
தான் இன்றி உலகின்
இயக்கம் இல்லை என்று உணர்த்துகிறாள்
உணவினை அவளே தருகிறேன்
என்கிறாள்
நீரெல்லாம் என்னிலே ஊற்று
என்கிறாள்
ஆயிரம் தான் இவன் கற்றுணர்ந்தும்
இவள் மீதே மோகம் கொள்கிறான்.

மரங்களை கூறு போட்டு கூவி விக்கிறான்
தடாகங்கள் அழித்து மாடங்கள் நிரப்புகிறான்
மலைகள் குடைந்து கற்களை
விற்கிறான்
மனைகள் நிறைந்து பணமே மிதந்தது

மனிதனின் பண மோகமும் கூடிட
ஞாயிறின் கோபமோ கூடியது
பருவ கால மழையும் பொய்த்தது
வசந்த கால தென்றலும் நின்றது.
கோடை வெய்யிலின் வேகமும் கூடியது
மழையோ வெள்ளமாய் அழிவையே தந்தது
தென்றலோ புயலாக அழிவாய் வந்தது
இப்போது அழுதென்ன பலன்
அவள் உன்னை ஏமாற்றி விட்டாளே!

எழுதியவர் : பவிதன் (17-Jun-19, 4:31 pm)
சேர்த்தது : பவிதன்
Tanglish : panam ennum kathali
பார்வை : 130

மேலே