ஓய்வது எப்போதோ

ஓய்வது எப்போதோ ?
********************************************

உடலின் சுமையே சுமையல்ல கொல்லும்
விடமனமே நீதான் பெருஞ்சுமையாம் ! மண்மேல்
கிடந்தலைந்து மெய்களைத்தால் சற்றோயும்
உடலிலா மனமேநீ ஓய்வதெப்போதோ ?

எழுதியவர் : சக்கரைவாசன் (17-Jun-19, 7:28 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 172

மேலே