கவிஞன்

தன் மூளையில்
உள்ளதை ஓலையில்
எழுதி மூலை முடுக்கெங்கும்
சொன்னப் புலவன் வள்ளுவன்

கட்டுத் தறியில்
பட்டு நெய்யாது
பாட்டு நெய்தப்
பாவலன் கபிலன்

தன் பண் மையினால்
பெண்மையினைப்
பேணாமையினை
தன் பேனா மையினால்
திட்டியவன்
அவர் முகத்தில்
மையைத் தீட்டியவன்
பாரதி

கவிஞன்
தலை மகளுக்குப்
பிறக்காது ஒரு
கலைமகளுக்குப்
பிறந்தவன்

வீட்டு வரி
கட்டமுடியாத
கவிஞனிடம்
பாட்டுவரி
கட்டுக்கட்டாய்

புலவனோடு
மையைவிட
வருமையே
அதிகம் இருக்கிறது

கவிஞன்
கற்களைக் கொண்டு
சிலைவடிக்காது
சொற்களைக் கொண்டு
கலை வடிக்கும்
சிற்பி

இவன்
எழுத்தாணி கர்ப்பம்
அடையும்போதெல்லாம்
கவிதை எனும்
குழந்தை பிறக்கிறது

அக்கவிக்குழந்தைக்கு
புது கை இருக்காது
எதுகை இருக்கும்

அக்கவிக்குழல்
யானையில் உறங்காது
மோனையில் உறங்கும்
பால் கேட்டு அழாது
சொல் கேட்டு அழும்

கழுத்தில்
உணவு இறங்காது
எழுத்தில் உணர்வு
இறங்கும்

மூச்சு இல்லை
வீச்சிற்கு இல்லை எல்லை

இவன்
நெல் விதைக்காது
வெள்ளைத் தாளில்
சொல் விதைக்கும்
விவசாயி

விவசாயி
விதை போட்டு
விதைகளை அறுவடை
செய்பவன்
கவிஞன்
வார்த்தைகள் போட்டு
கவிதைகளை வார்த்தெடுப்பவன்

அவன் களை
எடுப்பவன்
இவன் கலை
வடிப்பவன்

விவசாயி
கலப்பைக் கொண்டு
களைப்பை அடைபவன்
இவன்
எழுத்தாணி கொண்டு
தன் எழுத்தால் ஆணி
அடிப்பவன்

இவன்
இலட்சத்தில்
ஒருவன் அல்ல
இலக்கியத்தில்
ஒருவன்

நாம் கவிஞன்
என்பதில் மகிழ்ச்சி கொள்வோம்

எழுதியவர் : புதுவைக் குமார் (18-Jun-19, 7:44 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : kavingan
பார்வை : 72

மேலே