உழைப்பே உயர்வு தரும்

காலமெல்லாம் மெய்யாய்
இரவு பகல் பாராது
மதியால் உடலால் ஓடாய் உழைத்து
ஈட்டிய ஊதியத்தில் கடனின்றி
குடும்பத்துடன் வாழ்ந்திட கஷ்டமிருந்தும்
அதில் ஈடுபாடிருந்தது
மனநிறைவு இருந்தது
லாட்டரியில் எதிர்பாராது லட்சங்கள்
ஒரே நொடியில் என்னை
பணக்காரனாக்கியது பணத்தால்
நான் கண்டிராத வேண்டாத எத்தனையோ
அத்தனையும் நாடவைத்தது
வேண்டா வேதனை மனதில் சேர
அமைதி போனது ,மெய்கண்ட உள்ளம்
ஏனோ பொய்யைத்தேடி போனது
பாயில்லா பாய்மரக்கப்பல்
ஆழ்கடலில் தத்தளிப்பதுபோல்
தள்ளாடி நான் ………….. அப்போது
உள்மனம் சொன்னது 'போதுமடா
இந்த புது வாழ்வு ;, உழைப்பில் மட்டுமே
உயர்வு காணலாம் அமைதியும்
தெரிந்துகொண்டாயா தெளிந்தாயா'
என்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-Jun-19, 1:34 pm)
பார்வை : 119

மேலே