தமிழ்

தமிழ் 👌

தாய் மொழி தமிழ் மொழியில் அள்ள அள்ள அமுதசுரபி போல் சொற்கள் இருக்க அன்னி மொழிதனில் ஏன் பேசுகிறாய்.

பணியிடத்தில்
வேறுவழியில்லை.
சொந்தம், பந்தம்
நண்பர்களிடத்துமா
வெட்கபட வேண்டும்
நீ நிச்சயம் வெட்கபட வேண்டும் .

'பழக்க தோஷம்
அதனால் தான்'
என்பதெல்லாம் வெறும் கதை
அன்னிய மொழியின் மோகம் உன்னை ஆட்டிபடைப்பதே உண்மை.

ஒரே ஒரு நாள்
காலை முதல் இரவு தூங்கும் வரை
தமிழ் மொழியில் பேசி
பார்
வாழ்க்கையின் உண்மையான சுவை புரியும்.

தமிழ் தேனை விட
இனிப்பானது.
தமிழ் முக்கனிகளை விட சுவையானது.
தமிழ் தென்றலை விட
மென்மையானது.
தமிழ் இளம் மங்கை போல் அழகானது.

உன் வாழ் நாட்கள் அதிகரிக்க வேண்மானால்
உன் ஆயுள் கூடவேண்டும் என்றால்
என்றும் நீ இளமையுடன் இருக்க வேண்டும் என்றால்
இன்றே, இப்போதே
ஆரம்பி எல்லாம் தமிழில்
பேசு கன்னி தமிழில்
பழகு அழகு தமிழில்
படி அருமை தமிழில்
பாடு இன்ப தமிழில்
நிச்சயம் உன் வாழ்க்கை
அர்த்தமாகும், மகோன்னதமாகும்.
-பாலு.

எழுதியவர் : பாலு (19-Jun-19, 11:34 am)
சேர்த்தது : balu
Tanglish : thamizh
பார்வை : 378

மேலே