என்னவளே என்னவளே

முழுநிலவாய் நீல வானில்
மண்ணுக்கும் விண்ணுக்கும் ஒளிபரப்பி
பவனி வந்தாலும் , இல்லை மெல்ல மெல்ல
தேய்ந்த தேய் நிலவாய் நிலை சிறு ஒளி வீசி
போனாலும் , இறுதியில் இருளில் காணாமல்
போனாலும் சரி, நிலவே ஆழ்கடலின் அலைகள்
உன்னோடு காதல் கொள்ள உயர உயர எழுவதுபோல்
பெண்ணே, நீ கிட்ட கிட்ட கிட்ட வந்தும்
தூர தூர போனாலும் , என் கண்களிலிருந்து
காணாமல் போனாலும் அந்த கடல் அலைகள்போல்
என்னுள்ளம் உன்னை நாடுதே என் செய்வேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Jun-19, 7:38 pm)
Tanglish : ennavale ennavale
பார்வை : 422
மேலே