முதுமொழிக் காஞ்சி 82

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
மிகமூத் தோன்காம நல்கூர்ந் தன்று. 2

- நல்கூர்ந்த பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

பொருளுரை: நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், மிகமூத்தான் காமத்திற் துய்க்கும் நுகர்ச்சி வறுமையுறும்.

வயது முதிர்ந்தும் ஆன்ம வழிகளிலும்,அறச்செயல்களிலும் ஈடுபடாமல் காம நுகர்வில் ஈடுபடுவது துன்பமாகும்.

யௌவனன் நுகரும் காமவின்பம்போல், வயோதிகன் நுகரும் காமவின்பம் சிறவாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jun-19, 9:51 pm)
பார்வை : 22
மேலே