மருத வயல்வெளியெல்லாம் ஒரு மண்வாசனை

காற்றோடு பூ மலரும் புலர்காலைப் பொழுது
கதிரோடு கீழ் வானம் சிவக்கும் அழகு
ஏரோடு உழும் உழவன் வரும் எழில் வேளை
நீரோடைச் சலனத்தில் கழனிகள் குளிர
மருத வயல்வெளியெல்லாம் ஒரு மண்வாசனை !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jun-19, 9:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 66
மேலே