ரசிகை

ரசிகை👌

உன் கவிதை மழையில் நினைகிறேன்.
அந்த அற்புத வரிகளில் வாழ்கிறேன்.
உன் தேனினும் இனிய தமிழை தினம் சுவைக்கிறேன்.
அந்த வார்த்தை ஜாலங்களில் மயங்குகிறேன்.
உன் புதினங்களில் புதைகிறேன்.
அந்த நேர்த்தியான உரைநடையில் உறைகிறேன்.
உன் மொழி ஆளுமையை நேசிக்கிறேன்.
அந்த கம்பீர குரல் வளந்தை ரசிக்கிறேன்.
உன் இலக்கிய பணியை போற்றி பரிசாக என்னையே தருகிறேன்.
நீ ஏற்றால் மகிழ்ச்சி அடைவேன் ஏற்காவிட்டால் கவலைப்படமாட்டேன்.
உன் ரசிகையாக என்றும் பின் தொடர்வேன்.
- உன் உண்மை ரசிகை.

- பாலு.

எழுதியவர் : பாலு (20-Jun-19, 12:41 pm)
சேர்த்தது : balu
Tanglish : rsigai
பார்வை : 179

மேலே