இறையன்பு கருவூலம் ஆசிரியர் கவிஞர் இராஇரவி நூல் விமர்சனம் முனைவர் கவிஞர் ஆ மணி வண்ணன் காவல் உதவி ஆணையர்

இறையன்பு கருவூலம் !


ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி

நூல் விமர்சனம் முனைவர் கவிஞர் ஆ .மணி வண்ணன்
காவல் உதவி ஆணையர் !

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர்,
சென்னை-600 017. பக்கங்கள் : 152, விலை : ரூ.110.

மதுரை மாவட்ட சுற்றுலா உதவி அலுவலராகப் பணியாற்றும் கவிஞர் இரா.இரவி அவர்கள் வெளியிட்டுள்ள 20 ஆவது நூல் இதுவாகும்.

ஆசிரியர் இரா இரவி சமீபத்தில் நம்மை விட்டுப் பிரிந்த தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா.மோகன் அய்யாவின் தமிழ் வளர்ப்பு பிள்ளை.

தனது ஓய்வு நேரம் முழுவதும் தமிழ்ப்பணியாற்றும் பெருந்தகை.

எழுதுவார், தொகுப்பார், வெளியிடுவார், மேடைகளில் முழங்குவார்.

தற்சமயம் தனது நூலுக்கு தமிழக அரசின் உயர் அதிகாரி திரு இறையன்பு அய்யா எழுதிய அணிந்துரைகளையும் இறையன்பு அய்யாவின் எழுத்துக்களை கவிஞர் பாராட்டித் தான் அவ்வப்போது தந்த எழுத்துக்களையும் நூலாகத் தொகுத்துள்ளார்.

அருமையான தொகுப்பு நூல்.

இந்நூலைப் படிக்கும் போது இறையன்பு அய்யாவின் எழுத்துக்களையும் எண்ணங்களையும் மீண்டும் ரசிக்க வாய்ப்பு கிட்டியது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது.

அனைவரும் வாங்கிப் படித்து ஆசிரியரைப் பாராட்டுங்கள். நன்றி

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (20-Jun-19, 8:47 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 55

மேலே