ஒரே கருத்தில் அமைந்த தமிழ் திரை இசை பாடல்கள் - 007

தமிழ் திரை இசை பாடல்கள் சில ஒரே மாதிரியான கருத்தோட அமைஞ்சுடுது
இதை திருட்டுனு சொல்ல முடியாது , ஆனா இந்த ஒற்றுமையை நீங்க கவனிக்காம போய் , இப்ப இத வாசிக்கிறது மூலமா கவனிக்குறீங்கனா அது ஒரு தனி அனுபவமா அமையும்னு நம்புறேன்.

அந்த காரணத்துக்காக எனக்கு தெரிஞ்ச பாடல்களை தொகுத்து எழுதி இருக்குறேன்.
உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லுங்க. நானும் தெரிஞ்சுகுறேன் , நன்றி

பாடல் 1 : காதல் சொல்வது உதடுகள் அல்ல
படம் : பத்ரி

தவறு செய்தால், முத்தம்,
தந்து என்னை திருத்திக்கணும்,
தண்டனை சரியா?

------------------------------------------------------------

பாடல் 2 : ஏப்ரல் மாதத்தில்
படம் : வாலி

இதயம் திருடுதல் முறையா - அந்த
களவுக்கு தண்டனைகள் இல்லையா இல்லையா?

முத்தத்தில் கசையடி நூறு - அந்த
முகத்தில் விழவேண்டும் இல்லையா இல்லையா?

இந்த பாடல் வரிகள் ல நான் பொதுவான விஷயமா பாக்குறது என்னன்னா , தண்டனையா முத்தம் கேக்குற அந்த குறும்பு தனம் தான்.
உங்களுக்கு இது ஒரே மாதிரி தோணுதா சொல்லுங்க!

எழுதியவர் : (25-Jun-19, 12:28 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 25

மேலே