மரம்

நான் ஓருயிரி!
நானும் ஓர் உயிரி...
நானின்றி மழை இல்லை- நாளை..
நானின்றிப் புவி இல்லை

மண்ணுக்குள் முளை விட்டு அம்
மண்ணுக்குள் வேரோடி முடிவில்
மண்ணுக்கே உரமாகி -நாளை
மண்ணாவேன்-மக்கி

நீர் விடச் சொன்னால் ....
நீர் வெட்டுகிறீர்!
நீர் விட்டு விடும் -நானே
நீரைத் தேடிக் கொள்கிறேன்.

ஒரு கனிக்குள் வைத்தேன்
ஒரு ஆயிரம் விதைகள்
அவ்வொவ்வொரு விதையிலு மாயிரம் கனிகள் - என்னை
ஒரு முறை விதைத்தீர்

உன் தந்தை வளர்த்தவள் நான்
உன்னை அறிந்தவள் நான்
உன் பிள்ளை எனைப் பேண
உன் வம்சம் காப்பவள் நான்

ஆண் ஒன்று பெண் ஒன்று ஆளுக்கொன் றென்றே
ஆண்டுக்கொரு மரம் வைத்திடுக; ஒரு
ஆண் மகனாகக் காத்து நிற்க... அந்த
ஆண்டவன் அதற்குத் துணை நிற்க!

எழுதியவர் : ஹரிஹரன் (25-Jun-19, 6:29 pm)
சேர்த்தது : Hariharan
Tanglish : maram
பார்வை : 322

மேலே