மனசாட்சி

மனசாட்சி

ஓ மானுடா ஏன்
பேச்சுக்கு பேச்சு
மனசாட்சியை இழுக்கிறாய்.
உண்மையில் உன்னுள்
மனசாட்சி இருக்கிறதா.
அப்படிப்பட்ட மனசாட்சி உன்னுள் எங்கு ஒளிந்துள்ளது.
'நான் மனசாட்சி படி
நடக்கிறேன்',
சொல்கிறாயே தவிர,
ஒரு நாளும் நீ அப்படி நடந்து கொள்வதில்லை
அப்படி நீ நடந்து இருந்தால்
ஏசு பிரான் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்.
காந்தி மகான் ஏன் சுடப்பட்டார் .
முதியோர் இல்லங்கள் ஏன் பெருகி வருகிறது.
தங்கைகள் சிலர் ஏன் தவறான வழிக்கு தள்ளப்படுகின்றனர்.
மனம் உன்னிடம் இருக்கிறது
ஒப்புகொள்கிறேன்
மனசாட்சி என்று கதை விடுகிறாயே
அது ஏங்கே இருக்கிறது
கொஞ்சம் காண்பி.
என் தோழர்கள் பிரமாண்ட கூட்டமாக
ஆண்,பெண் என்று பாகுபாடு இன்றி எல்லோரும் ஒரே நோக்கத்துடன் கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக
போராடினார்களே
அவர்களுக்கு அரசு தந்த பரிசு அடி, உதை.
இது தான் மனசாட்சியா.
மனசாட்சி இருக்க வேண்டிய இடம் நீதிமன்றம்
அங்கே மனசாட்சி இருக்கிறதா.
தனிமனித ஒழுக்கம்
மனிதநேயம்
துளிர் விடும் போது
அதை கெடுக்க பல சக்திகள்.
நமக்கேன் வம்பு
நம்ம வேலைய நாம பார்ப்போம்.
இளைய சமுதாயம் நினைப்பதில் என்ன தவறு.
சுயநலத்திற்கு காரணம்
எதிர்கால பயம்.
தவறான சமுதாய கட்டமைப்பு.
இதில் மனசாட்சி எங்கே அவனிடம் தேடுவது.
உதாரண புருஷர்களே தன் மனசாட்சியை பொருட்படுத்துவது இல்லை.
பின் மனசாட்சி அகராதியில் இருந்து அகற்றுவது தவிர வேறென்ன செய்ய....

- பாலு.

எழுதியவர் : பாலு (27-Jun-19, 10:28 am)
சேர்த்தது : balu
Tanglish : manasaatchi
பார்வை : 300

மேலே