வாழ நினைத்தால் வாழலாம் - ஓய்வின் நகைச்சுவை 190

வாழ நினைத்தால் வாழலாம்
ஓய்வின் நகைச்சுவை: 190

மனைவி: (பாடுகிறார் ) வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ......

கணவன்: எ..ன்...னே காலம் காத்தலே மாமி நல்ல மூடிலே இறுக்கப்பிலே

மனைவி: இல்லைன்னா பரிச்சையிலே பெயிலுனு, வீட்டுக்காரரிடம் சண்டைபோட்டானு, வாழ்கையிலே பிரச்சனைன்னு தற்கொலை செஞ்சிட்டா வாழ்கையே அர்த்தமேயில்லைங்க. வாழ்ந்து காட்டணும். நீங்கோ கூட ரெம்ப இஞ்சிதான் உங்களுக்கு எப்போ கோபம் வரும்னு அந்த ப்ரஹ்மாவிக்கே தெரியாது. அதற்காக விட்டுட முடியுமா?

கணவன்: (மனதிற்குள்) ஆமாம்டி அடங்கி பல்லு புடிங்கின பெட்டி பாம்பாத்தான் போனேன். மனசுக்குள் நினைத்தாலே கண்டுபிடுச்சிடுவாள்

மனைவி: என்ன முணுமுணுக்கிறீங்க? எல்லாம் தெரியும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (27-Jun-19, 1:27 pm)
பார்வை : 166

சிறந்த நகைச்சுவைகள்

மேலே