துயில் கொடுத்து கனவு விரிக்கும் தேவதை நீ
பூக்கும் மலர்களெல்லாம் ஒரு கவிதை எழுதினால்
அது உன் புன்னகையின் வரிகளாகவே இருக்கும் !
தேக்கு மரம் ஒரு கவிதை எழுதினால்
என்னனை நீ தொட்டு என்னையும் மென்மை ஆக்கிவிடு என்று சொல்லும் !
நீக்கமற எங்கும் உலவும் தென்றல் ஒரு கவிதை எழுதினால்
உன் கார்க்கூந்தலுடன் கலைந்தாடிய அழகாகாத்தான் இருக்கும் !
தூக்கமற்று இளைஞன் தவித்திருந்தால்
துயில் கொடுத்து கனவு விரிக்கும் தேவதை நீயாகத்தான் இருக்கும் !
பாக்கள் பல புனையும் பாவலன் நான்
டா வின்சியின் தூரிகையை தந்துவிடு புன்னகையில் இன்னொரு லிசாவாகத்
தீட்டி விடுகிறேன் உன்னை !