எங்கள் கிராமம்

பள்ளம் குழிகள்
நிறைந்த சாலை
பயணச் சேவைகளும்
குறைந்த பாதை

உயர்ந்த பனமரக் காடும்
ஊர்ந்து திரியும்
சாரைப் பாம்பும்
பாதை ஓரமாக சர சர
என்று காற்றுடன் சண்டை
போடும் ஈச்சமரம்

ஓயாது ஓசை எழுப்பும்
உப்புக் கடலும்
ஆயிரம் திறமைகள்
இருந்தும் அன்றாட
உழைப்புக்காக தன்னுள்ளே
மறைத்து வைத்து விட்டு
நடமாடும் இளஞர்களும்

உப்பு நீரிலே நீந்தி
உழைத்து வந்த
பின்தான் ஒரு பிடி சாதம்
என்ற. நிலமையில் வாழும்
மீனவர்களையும்

உழைப்பைக் கண்டவுடன்
மதுக் கடையை நாடும்
ஒரு சிலரையும்
அவர்களை திருத்தி
நல் வழி எடுக்க நினைக்கும்
நல்ல பல உள்ளங்களையும்

சாதிக்க சாதிக்க என்று துடிக்கும்
மாணவ மாணவியரையும்
சுமந்திருக்கும் சிறு கிராமம்
எங்கள் தளவாய்க்கிராமம்

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (4-Jul-19, 10:30 am)
Tanglish : engal giramam
பார்வை : 64

மேலே