விண்மீனைத் தேடுகிறேன்

நிலாவக் காட்டி நீ சோறு ஊட்டியதும்
நான் வேண்டாவெறுப்பா அத உண்ண மறுத்ததும்......
தூரத்து வானத்த காட்டி அப்பாவுக்கு கொடுத்துருவேன்னு சொன்னதும்
நான் ஏதும் அறியாதவனாய் அப்பாவை எங்கனு கேட்டதும்.....
அதோ என வானத்தை நோக்கி மூன்று விளக்குகளைக் காட்டி
இடப்பக்கத்துல இருப்பது அப்பானும் வலப்பக்கத்துல இருப்பது நானும் நடுவுல இருப்பது நீனும்னு சொன்னதும்........
நான் இந்த வெவரம் ஏதொன்னும் அறியாம இருந்ததும்....
அப்போ அதுதான் விண்மீனுனு தெரியாம இருந்ததும்......
அறியும் வயது வந்தப்போ அத கண்டுகொள்ளாது போனதும்......
காலன் அம்மாவைப் பறித்துக் கொண்டதும்......இப்போ,
அந்த ' விண்மீனைத் தேடுகிறேன் ' மீண்டும் வருமானு......?

எழுதியவர் : வேல்விழி (4-Jul-19, 10:01 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 749

மேலே