எங்கள் கச்சேரி

எங்கள் கச்சேரி
வெண்மதி குளுமையில்
அகலத்தை புறத்தே
உயரத்தை அகத்தே
உலகிற்கு காட்டி
அமைதியாய் உறங்கும்
தண்ணீர் பரப்பில் !
வாழும் உயிர்கள் பொழுதை
போக்கிட இடைவிடாமல்
நடத்தும் கச்சேரி
ரீ….ரீ..ரீ…ரீ…ரீ…
பாடகனாய் ரீங்கார வண்டுகள்
சளக்..சளக்….தாளம் போட்ட
கரையோர திவலைகள்
இடை இடையிடை
அப்ளாஸ் போட துள்ளி
குதிக்கும் சிறு சிறு மீன்கள்
நடு நடுவே குரலிட்ட
பாடகியாய் பறவைகள்
கீ..கீ…கீ…கூ.கூ..கூ…
அபஸ்வர குரலாய்
தவளை தந்திடும்
க்ராக்..க்ராக்..க்ராக்..
கச்சேரி களை கட்ட..!
உற்சாகமாய் யானையின் பிளிறல்!
ப்ராக்..ப்ராக்…ப்ராக்….
இசையின் உச்சத்தில் தன்னை
மறந்த நரியின் ஊளை
ஊ…ஊ…ஊ….ஊ..ஊ..
இவர்களின் இரைச்சலில்
தூக்கம் கலைந்த கோபத்தில்
உறுமிடும் சிங்கம்
க்ர்.க்ர்..க்ர்..க்ர்…க்ர்….
வாய்ப்பு கேட்டு அலறும்
மயில்கள் பாக்…பாக்..பாக்
அனைவரை சாந்தப்படுத்த
தென்றலாய் வீசும் காற்று !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (5-Jul-19, 1:01 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : engal kachari
பார்வை : 73

மேலே